×

நல்லம்பள்ளி பிடிஓ அலுவலகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் குப்பை தொட்டிகள்

தர்மபுரி, ஜூன் 14:  நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயன்படாமல் கிடக்கும் குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத் தின் கீழ், ஆண்டுதோறும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குப்பை தொட்டிகள் வழங்கப்படுகிறது. நல்லம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட 30 ஊராட்சிகளுக்கும், கடந்த 3 ஆண்டுகளாக குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டு, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள், கடந்த 2 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது.

இதனால், பல ஊராட்சிகளில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் ரோட்டில் கொட்டி வைக்கப்பட்டு, சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. எனவே, நல்லம்பள்ளி ஊராட்சியில் குப்பை தொட்டிகள் தேவைப்படும் கிராமங்களுக்கு, குப்பை தொட்டிகளை அனுப்பி வைக்க பிடிஓ அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : office ,BTO ,
× RELATED நெல்லை சார் பதிவாளர் ஆபீசில் லஞ்ச...