×

ஆத்தூர் அருகே பூட்டியே கிடக்கும் நூலகத்தால் மாணவர்கள் அவதி

ஆத்தூர், ஜூன் 13: ஆத்தூர் அடுத்த ஈச்சம்பட்டியில் நூலகம் பூட்டி கிடப்பதால் பட்டதாரி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். ஆத்தூர் ஒன்றியம் ஈச்சம்பட்டி கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு  பயன் பெறும் வகையில், நூலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த நூலகம் திறக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், கரையான் அரித்து வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த நூலகத்தை முறையாக பராமரிக்காததால், விலை மதிப்பில்லாத பல புத்தகங்கள் செல்லரித்து வருகிறது. தற்போது, போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், போட்டித்தேர்வுக்கான பல்வேறு புத்தகங்கள் உள்ள நூலகம் பூட்டியே கிடப்பதால், பட்டதாரி இளைஞர்கள் தவித்து வருகின்றனர். எனவே, உடனடியாக நூலகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Atoor ,
× RELATED ஆத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மகாசபை கூட்டம்