×

வாகன ஓட்டிகள் அவதி சிறுகடம்பூரில் மக்கள் தொடர்பு முகாம் ரூ.6 லட்சத்தில் 83 பேருக்கு நலத்திட்ட உதவி

செந்துறை, ஜூன் 13:சிறுகடம்பூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 83 பேருக்கு ரூ.6,09,750 மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் சிறுகடம்பூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு நிறைவு நாள் முகாம் நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். முகாமில் வருவாய்த்துறை சார்பில் 33 பேருக்கு ரூ.2.40 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா, மனைவரி பட்டா, நத்தம் பட்டா மாற்றம், நிலப்பட்டா மாற்றம் மற்றும் மனைவரி பட்டா நகல்களுக்கான ஆணைகள் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 20 பேருக்கு ரூ.2.81 லட்சம் மதிப்பில் இறப்பு சான்றிதழ், மாவட்ட வழங்கல்துறை சார்பில் 10 பேருக்கு புதிய குடும்ப அட்டை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 15 பேருக்கு ரூ.78,750 மதிப்பில்இலவச தையல் இயந்திரம், சுகாதாரத்துறை சார்பில் 5 கர்ப்பிணிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சத்துணவு பெட்டகங்கள் என மொத்தம் 83 பேருக்கு ரூ.6,09,750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: மக்களைத்தேடி திட்டங்கள் மக்களுக்காக நலத்திட்டங்கள் என்ற சீரிய நோக்கத்துடன் தமிழக அரசால் ஒவ்வொரு மாதமும் இருமுறை மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாமில் அப்பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் இருந்து நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் பெண்களுக்கென அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. எனவே அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளை அனைவரும் பெற்று பயனடையலாம் என்றார்.
முகாமில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தரராஜன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ஹேசமந்த்காந்தி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) முருகன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Vehicle Players ,persons ,People's Contact Campaign ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...