×

குடிநீர் கோரி குடங்களுடன் யூனியன் அலுவலகம் முற்றுகை அலங்காநல்லூரில் பரபரப்பு

அலங்காநல்லூர், ஜூன் 12: பாலமேடு அருகே தெத்தூர் ஊராட்சிக்குட்பட்டது கெங்கமுத்தூர். இங்கு 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல்கள் அமைத்து குடிநீர் விநியோகம் நடந்து வந்தது. மேலும் தேவையை சமாளிக்க காவிரி கூட்டுக்குடிநீரும் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போர்வெல்கள் வறண்டு தண்ணீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. தவிர காவிரி கூட்டுக்குடிநீரும் முறையாக வருவதில்லை. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வாரம் ஒருமுறை வரும் தண்ணீரும் துர்நாற்றத்துடன் புழு பூச்சிகள் கலந்து வருகிறது. இதுகுறித்து யூனியன் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று அலங்காநல்லூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்த பின்பே அனைவரும் கலைந்து சென்றனர்.
கெங்கமுத்தூர் மக்கள் கூறுகையில், ‘சாத்தியார் அணை அருகேதான் எங்கள் ஊர் உள்ளது. எனினும் எங்களது பயன்படும் தண்ணீருக்கே பல கிமீ தூரம் அலைந்து பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. குடிகும் நீரை ஒரு குடம் ரூ.10க்கு வாங்க வேண்டிய அவலநிலை உள்ளது. விரைவில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட வேண்டியதிருக்கும்’ என்றனர்.

Tags : office ,Union ,Alanganallur ,
× RELATED புழல் ஒன்றிய அலுவலகத்தில் 9 மணி நேரம்...