×

புழல் ஒன்றிய அலுவலகத்தில் 9 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் பறிமுதல்

புழல்: புழல் ஒன்றிய அலுவலகத்தில் நள்ளிரவு 9 மணி நேரம் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் நேற்று புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 12 மணி வரை 9 மணி நேரம் நீடித்தது.

இந்த சோதனையின்போது ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர் மற்றும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை விசாரணை நடத்தப் பட்டது. கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post புழல் ஒன்றிய அலுவலகத்தில் 9 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Puzhal union ,Puzhal ,post Corruption Eradication Department ,Puzhal union office ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் பெண் கைதி உயிரிழப்பு