×

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தால் நடவடிக்கை

சத்தியமங்கலம், ஜூன் 12: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், டி.என்.பாளையம், பவானிசாகர், விளாமுண்டி, தலமலை, கடம்பூர், ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி என 10 வனச்சரகங்கள் உள்ளன. வனப்பகுதியில் வசிக்கும் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது தீவனம் மற்றும் குடிநீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில், வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க சில விவசாயிகள் சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலிகளை அமைத்துள்ளனர். இந்த மின்வேலியில் பாயும் மின்சாரம் வனவிலங்குகளை தாக்கும்போது விலங்குகள் அப்பகுதிக்கு வருவதில்லை. இதனால், ஒரு சில விவசாயிகள் மின்வேலியில் சட்ட விரோதமாக விவசாய உபயோகத்திற்கு வழங்கப்படும் இலவச உயர் அழுத்த மின்சாரத்தை பாய்ச்சுவதால் யானை உள்ளிட்ட விலங்குகள் மின்வேலியில் சிக்கி பலியாகின்றன. எனவே, மின்வேலி அமைத்து சட்டவிரோதமாக உயர்அழுத்த மின்சாரம் பாய்ச்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : power plant ,forest area ,
× RELATED கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்