×

ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஈரோடு, ஜூன் 12:  ஈரோடு ஜவுளி சந்தையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களான லுங்கிகள், காட்டன் உடைகள், உள்ளாடை ரகங்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் என அனைத்து தரப்பு உடைகளும் விற்பனை செய்யப்படுகிறது. ஜவுளி சந்தை, திங்கள் கிழமை இரவு துவங்கி, செவ்வாய்க்கிழமை வரை நடப்பது வழக்கம். இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து மொத்தமாக ஜவுளி ரகங்களை வாங்கி செல்கின்றனர்.ரம்ஜான் பண்டிகை மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கடந்த இரண்டு வார ஜவுளி சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.  தற்போது பள்ளி சீசனும், ரம்ஜான் பண்டிகையும் முடிந்ததால் நேற்று நடந்த ஜவுளி சந்தைக்கு வெளி மாநிலத்தை சேர்ந்த மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் குறைந்தளவே வந்ததால் விற்பனை மந்தமாக இருந்தது. இதுகுறித்து கனிமார்க்கெட் (ஜவுளி சந்தை) சங்க தலைவர் செல்வராஜ் கூறுகையில்,` ரம்ஜான் பண்டிகை, ஸ்கூல் சீசன் காரணமாக கடந்த 2 வாரமாக சந்தையில் விற்பனை சுமராக இருந்தது.அனைத்து சீசனும் முடிந்து விட்டதால் நேற்று  சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆடி மாதம் துவங்கினால் தான் விற்பனை மீண்டும் களைகட்டும். அதுவரை ஜவுளி ரகங்களின் விற்பனை மந்தமாக தான் காணப்படும்’ என்றார்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...