×

தர்மபுரி தீயணைப்புத்துறை சார்பில் இயற்கை பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை

தர்மபுரி, ஜூன் 12: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தீயணைப்புத்துறை சார்பில், இயற்கை பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பில், இயற்கை பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. நேற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரசவவார்டு கட்டிட வளாகத்தில், தர்மபுரி தீயணைப்பு துறை சார்பில், இயற்கை பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மரம் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாட்டிற்குள் சிக்கியவர்களை, கட்டர் கருவி பயன்படுத்தி எவ்வாறு மீட்பது , தீ பிடித்தால் அணைத்து எப்படி தப்பிப்பது, கிணறு, ஆற்றில் விழுந்த நபர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் ஒத்திகை செய்து காண்பித்தனர். தர்மபுரி மாவட்ட தீணைப்பு அலுவலர் (பொ) ஆனந்த் தலைமையில், நிலைய அலுவலர் ராஜா மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். அரசு மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள், நோயாளிகள் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags : firefighters ,Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி