×

காரிமங்கலம் அருகே கூட்டுறவு தேர்தலில் 6 இயக்குநர்கள் தேர்வு


காரிமங்கலம், ஜூன் 12: காரிமங்கலம் அடுத்த திண்டல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடந்த ஆண்டு இயக்குனர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், 5 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 6 பேரை தேர்ந்தெடுக்க முறையான தேர்தல் நடத்தக்கோரி வக்கீல் மாதேஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து, உயர்நீதிமன்றம் முறையாக தேர்தல் நடத்த கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் வங்கி அலுவலக கட்டிடத்தில், 6 இயக்குநர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட்டது. இதில் , 22 பேர் போட்டியிட்டனர். 770 பேர் வாக்களித்து, 6 இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை நடைபெற்றது. இதில், எம்.சின்னசாமி, குமரேசன், போத்திராஜ், சி.சின்னசாமி, இளங்குமரன், வி.சின்னசாமி ஆகிய 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓட்டு எண்ணிக்கையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : directors ,election ,Calimangalam ,
× RELATED உடல்பருமனை குறைக்க அறுவை சிகிச்சை...