×

மாரண்டஅள்ளி பகுதியில் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க தண்டோரா போட்டு விழிப்புணர்வு

பாலக்கோடு, ஜூன் 12: மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்க கோரி தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, எஸ்பி ராஜன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களுக்குட்பட்ட கிராமங்களில், நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க ேகாரி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்குட்பட்ட பெல்லுஅள்ளி, பெல்ரம்பட்டி, நல்லாம்பட்டி, கரிகுட்டனூர், மேல்சீங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில், உரிமம் இல்லாமல் பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க ேகாரி, தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை, மாரண்டஅள்ளி காவல் நிலையத்திலோ அல்லது மாரண்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலகத்திலோ ஒப்படைக்க ேவண்டும் என்றும், அவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்கும் நபர்கள் மீது, காவல்துறை சார்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது, தடையை மீறி நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பது தெரிய வந்தால், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில் மாரண்டஅள்ளி சப் இன்ஸ்பெக்டர் காசிநாதன் கலந்து கொண்டார்.

Tags : Dandora ,area ,Maranthallalli ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது