×

வாகன ஓட்டிகளை அச்சப்படுத்தும் விளம்பர பேனர் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்

அரியலூர், ஜூன் 12: அரியலூர் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி சித்திரை பட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளது. அதில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஆடுதுறை -5 ரக உளுந்து சித்திரை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சாகுபடி தற்போது நிலவும் கடும் கோடை வெப்பநிலை காரணமாக மஞ்சள் தேமல் நோயால் பாதிக்கப்பட்டு உளுந்து வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. வெள்ளை ஈ என்ற பூச்சி இந்த நோயை பரப்பி உளுந்து செடியின் சாற்றை உறிஞ்சி மஞ்சள் நிறமாக மாற்றி செடியின் வளர்ச்சியை குறைக்கிறது.

இத்தகைய தேமல் நோயால் பாதிக்கப்பட்ட உளுந்து செடிகளை 45 நாட்கள் வரை முழுவதுமாக பிடுங்கி அழித்துவிட வேண்டும். மஞ்சள் நிற ஒட்டுபொறி ஏக்கருக்கு 5 வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். வயலின் களைகள் இல்லாமல் பராமரிப்பது அவசியம். இத்தகைய நோயை கட்டுப்படுத்த வேம்பு மருந்து அசாடிராக்ஷன் 0.03 சத வேம்பு பூச்சிக்கொல்லை மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மிலி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் சேர்த்து தெளிக்க வேண்டும். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : activists ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...