ஆசிரியை இடமாற்றம் கண்டித்து பள்ளி முன்பு மாணவர்கள் பெற்றோர் தர்ணா போராட்டம்

பெரம்பலூர், ஜூன் 11: பொம்மனப்பாடி கிராமத்தில் ஆசிரியை இடமாற்றம் செய்வதை கண்டித்து பள்ளி மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பாடி கிராமத்தில் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சீலா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் 2-ம் வகுப்பிற்கு பாடம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவரை நத்தக்காடு கிராமத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதனையறிந்த 2ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அந்த ஆசிரியை பணியிடமாற்றம் செய்யக் கூடாது. அதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் வகுப்பை புறக்கணித்து பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>