கிருஷ்ணகிரியில் ஓய்வுபெற்ற அலுவலர்

சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி, ஜூன் 11: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட மைய ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் மாதன், நிர்வாகிகள் ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன், பழ.வெங்கடாஜலம், பெரியதம்பி, கோபால் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் உறுதியளித்தபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத் திருத்தப் பலன்களை 1.1.2016 முதல் அமல்படுத்தி 21 மாத நிலுவைகள் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ₹9 ஆயிரம் என நிர்ணயம் செய்து, 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : officer ,Krishnagiri ,
× RELATED ஓய்வு பெற்ற அதிகாரிக்கு பிரிவுபசார விழா