×

குள்ளனூர், பிடமனேரி ஏரியை தூர்வார தமாகா வலியுறுத்தல்

தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சி குள்ளனூர், பிடமனேரி ஏரியை தூர்வார வேண்டும் என்று, உயர்கல்வித்துறை அமைச்சரிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. தர்மபுரி மேற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் புகழ், கட்சி நிர்வாகிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனை நேரில் சந்தித்தார். அப்போது இலக்கியம்பட்டி குள்ளனூர் ஏரி, பிடமனேரி ஏரிகளை நம்பி பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. கடும் வறட்சியால் 2 ஏரிகளும் வறண்டு, ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகள் தண்ணீர் இல்லாமல் உள்ளது. தற்போது வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கியுள்ள குள்ளனூர், பிடமனேரி ஏரிகளை தூர்வார வேண்டும்.

இதன் மூலம் தென்மேற்கு பருவமழை நீரை சேமிக்க வாய்ப்பாக இருக்கும். ஏரியில் தண்ணீர் தேங்கும் பட்சத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். தண்ணீர் இல்லாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளில், தண்ணீர் கிடைக்கும் என்று கோரிக்கை வைத்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் பரிசீலனை செய்து, ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, தமாகா வட்டாரத்தலைவர் மணி, நகரத்தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் சின்னதுரை, கார்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Durvara Thamaga ,Pudamneri Lake ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா