×

வி.கே.புரத்தில் ஞானதிரவியம் எம்பி நன்றி தெரிவிப்பு

வி.கே.புரம், ஜூன் 11:  வி.கே.புரம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் ஞானதிரவியம் எம்பி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நெல்லை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஞானதிரவியம் எம்பி, நேற்று மாலை வி.கே.புரம் அமலி பள்ளி அருகே நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியை துவக்கினார். தொடர்ந்து வி.கே.புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்களும், கட்சியினரும் கோரிக்கை மனுக்களை     அளித்தனர். அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் எம்பிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஐஜி ஜான்நிக்கல்சன், மாநில தேர்தல் பணிக்குழு ராஜம்ஜான், திமுக நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் பரணிசேகர், அவைத்தலைவர் அதியமான், நகர பொருளாளர் கணேசன், மாவட்ட கலைஇலக்கிய மற்றும் பகுத்தறிவு பிரிவு செயலாளர் நெடுஞ்செழியன், வக்கீல் அணி முன்னாள் அமைப்பாளர் ஜோசப் ஆரோக்கியராஜ்,  மாவட்ட சிறுபான்மை பரிவு துணை செயலாளர் பீட்டர்சுவாமிநாதன்,  மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வைகுண்டராமன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெயராமன், பேராசிரியர் வல்சகுமார், நகர சிறுபான்மை பிரிவு ஷாஜஹான் மற்றும் காங்கிரஸ் நகர பொருளாளர் சச்சிதானந்தம், மதிமுக நகர செயலாளர்  பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED குண்டாசில் இருவர் கைது