×

கோவை நீதிமன்றத்தில் காலி பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அழைப்பு

கோவை, ஜுன். 7: கோவை மாவட்டம் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், மசால்ஜி ஆகிய பதவிக்கான விண்ணப்பித்தவர்களில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகளை, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் ஆஜராகி குறைகளை நிவர்த்தி செய்யலாம்.கோவை மாவட்டம் தலைமை குற்றவியல் நீதிபதி நாகராஜன் அறிவிக்கையின்படி வரபெற்ற அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், மசால்ஜி ஆகிய பதவிக்கான விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பிறகு குறைபாடுகளுக்காக உத்தேசமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பற்றிய விவரம் நீதிமன்ற வலைதளத்தில் https://districts.ecourts.gov.in/coimbatore பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகளை, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த வலைதளத்தில் பார்த்து கொள்ளலாம். விண்ணப்பங்களை நிவர்த்தி செய்வதற்கான காலம் 12ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் அடையாள அட்டையான ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவைகளில் ஏதாவது ஒன்றுடன் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பதாரரே நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டும் மேல் கண்ட தேதிகளில் கோவை மாவட்டம், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தலைமை குற்றவியல் நீதிமன்ற கட்டிடத்தின் தரை தளத்திற்கு காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்கு நேரில் அஜராகி, சிரஸ்தரரை அணுகி குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்டம் தலைமை குற்றவியல் நீதிபதி நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : court ,Coimbatore ,
× RELATED பெயர் நீக்கப்பட்டவர்கள் வாக்களிக்க...