×

ரிங் ரோடு சந்திப்பில் தொடரும் விபத்து

ஈரோடு, ஜூன் 7: ஈரோடு ரங்கம்பாளையம் ரிங் ரோடு சந்திப்பில் இரவு நேரத்தில் தொடரும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு ரங்கம்பாளையம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்னிமலை ரோடு, ரிங் ரோடும் சந்திக்கின்றன. இதில், சென்னிமலை ரோட்டில் இருந்து வரும் வாகனங்களும், ரிங் ரோட்டில் இருந்து வரும் வாகனங்களும் அடிக்கடி ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகின்றன. நேற்று முன்தினம் இரவு வெள்ளோட்டில் திருமண விசேஷத்திற்கு சென்று விட்டு, வந்த கார், ரிங் ரோடு அருகே வந்தபோது, டிவைடர் இருப்பதை பார்த்து திருப்ப முயன்றபோது, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில்,`ரங்கம்பாளையம் ரிங் ரோடு சந்திப்பில் உயர் மின் விளக்குகள் உள்ளது. ஆனால், போதிய வெளிச்சம் மற்றும் பிரதிபலிப்பான் இல்லாததால் தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், ரிங் ரோடு சந்திக்கும் இடத்திற்கு அருகில் இருபுறமும் வேகத்தடை அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம்’ என்றனர்

Tags : Accident ,Ring Road Junction ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...