கோபியில் கேஏஎஸ் டிராவல்ஸ் அலுவலகம் திறப்பு

கோபி, ஜூன் 7:  கோபியில் கேஏஎஸ் குழுமம் சார்பில் கேஏஎஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர் ஏ.சுபாஸ்சுவாமிநாதன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் குழந்தைவாசுகி, கணேசன், பாலகிருஷ்ணன், சொக்கநாதன், நாகேந்திரன் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்கப்பூர் எஸ்ஏடி குழும நிர்வாக இயக்குநர்கள் அருள்மணி நடராஜன், தீபிகா அருள்மணி மற்றும் விஜயன் திரையரங்கு உரிமையாளர் ஓ.எஸ்.பாலாஜி  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து முதல் சேவையை துவக்கி வைத்தனர். விழாவில், வி.டி. கல்யாண் ஸ்டோர் உரிமையாளர் வி.டி.ராஜ், சாரதி ரெடிமேட்ஸ் செந்தில், ஏசிஎஸ் இன்போடெக் உரிமையாளர் ஆசாத், டொயோட்டா நிறுவன விற்பனை பிரதிநிதி ஹைதர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கேஏஎஸ் குழும பங்குதாரர்கள் சந்திரன், கணேசன், ஆறுமுகம், மகேந்திரன், குமாரசாமி, கோடீஸ்வரன், புருஷோத்தமன், செந்தில், மரகதம், கலாமணி, விமலா, சங்கீதா, ராமாயி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories:

>