×

பட்டதாரி வாலிபர் தூக்கில் தற்கொலை

புதுச்சேரி, ஜூன் 7: புதுவை மீனாட்சிபேட் சோழன் வீதியை சேர்ந்தவர் ஆதிமூலம் (53). இவர், தட்டாஞ்சாவடியில் உள்ள பாப்ஸ்கோ நிறுவனத்தில் முதுநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இளைய மகன் சக்திவேல் (24), பி.எஸ்சி., ஓட்டல் மேலாண்மை முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெற்றோர் அவரை, திருமணம் வயது ஆகியும் இப்படி இருக்கலாமா? என கண்டித்துள்ளனர். இதனால் கடந்த 15 நாட்களாக தாவரவியல் பூங்கா எதிரே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்து கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி
இரவு வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோரிமேடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். எப்போதும் திட்டாத பெற்றோர், என்னை திட்டி விட்டினரே? என தனது நண்பர்களிடம் கூறி மனம் வருந்தியுள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : graduate youngster ,
× RELATED வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பிய பட்டதாரி வாலிபர் கைது