×

மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் ஜமாபந்தி: கிராம மக்கள் கோரிக்கை மனு

மன்னார்குடி, ஜூன் 7:மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஜமாபந்தி நேற்று துவங்கியது. முதல்நாள் 10க்கு மேற்பட்ட கிராமமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் பாலையூர், தலையாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், உள்ளிக்கோட்டை ஆகிய 5 உள்வட்டங்கள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் 1428 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தி நிகழ்ச்சி மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
முதல் நாளான நேற்று மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பருத்திக்கோட்டை, ராஜாளிக்குடிக்காடு, மூவாநல்லூர், மேலவாசல் நரசிம்மாச்சாரி, பாமணி, கர்ணாவூர், அரவத்தூர், சவளக்காரன் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் ஊராட்சி சார்பில் அனைத்து விதமான கோரிக்கைகள் குறித்து மாவட்ட உதவி ஆணையர் (கலால் ) பவானியிடம் மனுக்களை அளித்தனர்.
நிகழ்ச்சியில் தாசில்தார் லெட்சுமி பிரபா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அன்பழகன், தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில், மண்டல துணை வட்டாட்சியர்கள் ஜெயபாஸ்கர், சரவணக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் மீனா மகேஸ்வரி, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் இளங்கோவன், நகர வருவாய் ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் அளித்த மனுக்களை பரிசீலித்து உரிய தீர்வினை வழங்கினர். ஜமாபந்தி சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகள் தவிர தொடர்ந்து வருகிற 26ம் தேதி வரை மன்னார்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 77 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி தாலுகா அலுவலகத்தில் துவங்கியது. வருவாய் தீர்ப்பாய அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான தெய்வநாயகி தலைமை வகித்தார். தாசில்தார் ராஜன்பாபு முன்னிலை வகித்தார்.
இதில் மண்டல துணை தாசில்தார் வெங்கட்ராமன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜாமணி, தனிதாசில்தார் ஞானசுந்தரி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதல்நாள் 12 வருவாய் கிராமங்களுக்கான கணக்கு முடிப்பு நடைபெற்றது. இதில் பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை வேண்டுதல் உள்ளிட்டகோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அந்த மனுக்கள் உரியதுறை அலுவலர்களுக்கு தீர்வுகாண நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது.
இன்று தொடங்கி ஜமாபந்தி வருகிற 18ம்தேதி நிறைவுபெறுகிறது.

Tags : Mannarkudi ,Tiru Thottai ,
× RELATED பங்குனி பிரமோற்சவ விழா; மன்னார்குடி...