×

தி.பூண்டி கள்ளிக்குடியில் மரித்தியம்மாள் கல்லறை கோயில் திருவிழா

திருத்துறைப்பூண்டி, ஜூன் 4: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள மரித்தியம்மாள் கல்லறை கோயில் திருவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது. பகலில் அன்னதானம், மாலை 6 மணிக்கு கூட்டுப்பாடற் திருப்பலி, இரவு 9 மணிக்கு திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெடும்பலம், கள்ளிக்குடி கிராமவாசிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான்பிரிட்டோ, உதவி பங்கு தந்தை தாமஸ், நிர்வாகிகள் அந்தோணி, தங்கராசு, டாக்டர் சகாயம் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Marriottam Grave Temple Festival ,
× RELATED தில்லைவிளாகம் கிராமத்தில் புதிய நூலக...