பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

கோவை, ஜூன் 4:  கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் ஜூன் 3ம் தேதியன்று அசல் சான்றிதழ் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு  (மறு கூட்டல் மறுமதிப்பீடு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்தவர்களுக்கு அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்பட்டு வருகின்றன. தோல்வியடைந்த பாடங்களில் தேர்ச்சி பெற்ற பின்னரே அவர்களுக்கு இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : start ,
× RELATED டால்பின் முனைக்கு செல்ல அனுமதி