×

பொதுமக்கள் வௌியே செல்ல அச்சம் கோடை துவங்கும் முன் சுட்டெரிக்கும் வெயில்

* தஞ்சாவூரில் 97 டிகிரியை தாண்டியது

* குளிர்பான கடைகள் களைகட்டியது

தஞ்சாவூர் : தஞ்சையில் சுட்டெரிக்கும் வெயில் நேற்று 97 டிகிரியை தாண்டி கொளுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்தது. மேலும் குளிர்பான கடைகளில் விற்பனை களைகட்ட துவங்கியது. நுங்கு, இளநீர் விற்பனையும் படுஜோராக நடக்கிறது.தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலக் கட்டத்தில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். பருவ கால மாற்றத்தின் காரணமாக தஞ்சையில் அடிக்கடி மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக இருந்து வருகிறது. மிதமான வெயில் அடிக்க வேண்டிய இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரித்து வருகிறது.

இது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்துகிறது. பகலில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் இரவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. தஞ்சையில் நேற்று வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. காலை 9 மணி முதலே கொளுத்த தொடங்கிய வெயிலினால் தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் அனல் காற்று வீசியது. மேலும், கோடை காலத்தை போல கானல் நீர் தென்பட்டது.

வெயிலின் தாக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஒருசில வாகன ஓட்டிகள் துண்டு மற்றும் துணியினால் தலையை மூடியபடி வாகனங்களில் சென்றனர். இந்த வெயில் கொடுமையால் பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. பொதுமக்கள் சிலர் குடைகளை பிடித்துக் கொண்டு சாலையில் நடந்து செல்கின்றனர். சிலர் வெயிலின் தாக்கத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் தெரிவித்தனர். இது ஒருபுறம் இருக்க சுட்டெரித்த வெயிலின் காரணமாக சாலையோரங்களில் ஆங்காங்கே அமைக் கப்பட்டிருந்த இளநீர், தர்பூசணி கடைகளில் விற்பனை களைகட்டியது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூரில் நேற்று 97 டிகிரி வெயில் காணப்பட்டது.

வெளியில்தான் இந்த நிலைமை என்றால், வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பகல் நேரத்தில் வெயில் கொடுமை என்றால், இரவில் வெயிலின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகமாக இருந்தது. வெயிலை சமாளிப்பதற்காக பெரும்பாலானோர் பகல் நேரங்களில் வீடுகளிலேயே முடங்கினர். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை மக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிட்டனர்.

இதனால் தஞ்சாவூர் மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் நுங்கு, இளநீர், பதநீர், தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் தற்போது நுங்கு விற்பனையும் சூடுபிடிக்க துவங்கியது. தஞ்சாவூர் சுற்றுலா மாளிகை, நாகை சாலை, மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது. பொதுமக்கள் காத்திருந்து நுங்கு வாங்கிச்சென்றனர். வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாலையில் கானல் நீர் காணப்பட்டது.

The post பொதுமக்கள் வௌியே செல்ல அச்சம் கோடை துவங்கும் முன் சுட்டெரிக்கும் வெயில் appeared first on Dinakaran.

Tags : Vauye ,Thanjavur ,Vauiye ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...