×

இந்தியன் வங்கி சார்பில் சிசிடிவி கேமராக்கள் பழுது நீக்கும் பயிற்சி

தர்மபுரி, ஜூன் 4: இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், சிசிடிவி கேமரா பொருத்துவது மற்றும் பழுது நீக்கும் பயிற்சி இலவசமாக பெறுவதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், அனுபவமும், திறமையும் வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு, பல்வேறு பயிற்சி வகுப்புகள் இலவமாக நடத்தப்படுகிறது.

பயிற்சியோடு தொழிலுக்கான வங்கிகள் வழங்கும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு, சந்தை ஆய்வு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற பயனுள்ள வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில், தற்போது சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சி வகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் வருகிற 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். கிராமப்புற மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, பெற விரும்பும் பயிற்சி மற்றும் செல்போன் எண்ணுடன் நேரிலோ (அ) அஞ்சல் அட்டை மூலமோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இயக்குநர், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Indian Bank ,
× RELATED காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி...