×

நாகர்கோவிலில் மாநகராட்சி ஊழியர்களாக நடித்து நகை கொள்ளையடித்தவர்கள் யார்?

நாகர்கோவில், ஜூன் 4 : நாகர்கோவில் ராமன்புதூர் பழைய ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் மகாதேவர் ஐயர் (77). இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவார். கடந்த 29ம் தேதி இவரது வீட்டுக்கு இரு வாலிபர்கள் வந்தனர். கையில் பைல்கள் மற்றும் வரைபடங்கள், அளவீடு செய்வதற்கான உபகரணங்கள் வைத்து இருந்தனர். மகாதேவர் ஐயரிடம், பாதாள சாக்கடை பணிக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். இதற்காக அளவீடுகள் நடத்த உள்ளோம் என்று கூறி வீட்டுக்குள் நுழைந்த வாலிபர்கள், மகாதேவர் ஐயர் மற்றும் அவரது மனைவி கவனத்தை திசை திருப்பி, வீட்டில் பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். நேற்று முன் தினம் (2ம் தேதி) பூஜை அறை பீரோவை திறந்து பார்த்த போது தான் வீட்டில் 22 பவுன் நகைகள் கொள்ளைடியக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது பற்றி நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகி விட்டதால் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் ஏற்கனவே பழைய திருட்டு சம்பவங்களில் தொடர்பு உடையவர்களின் புகைப்படங்களை காட்டியும் விசாரணை நடந்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டிகளிடம் போலீசாக நடித்து நகைகள் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் இன்னும் குற்றவாளிகள் யாரும் சிக்க வில்லை. இந்த நிலையில் இப்போது வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களை குறி வைத்து நகைகள் திருட்டு நடக்க தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : jewelers ,Nagercoil ,servants ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...