×

வழித்தட பிரச்னையால் விவசாயி சடலத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு

தர்மபுரி, மே 30: தர்மபுரி அருகே வழித்தட பிரச்னையால், விவசாயி சடலத்தை கொண்டு செல்ல ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சீரியம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி சின்ராஜ்(60). இவரது வீட்டின் அருகே மாதப்பன், அவரது தம்பி சுப்பிரமணி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுடையே வழித்தட பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், உடல்நிலை குறைவால் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்ராஜ், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது சொந்த நிலத்தில் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து, மாதப்பன் நிலத்தின் வழியாக சின்ராஜ் சடலத்தை எடுத்து சென்ற போது, மாதப்பன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர், சடலத்தை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற மாரண்டஅள்ளி போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன்பின்னர், சின்ராஜின் சடலம் அவரது நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா