×

வெயில் தாளாமல் மதுரையில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருமங்கலம், மே 30 : கப்பலூர் மேம்பாலத்தில் அதிகளவில் வளர்ந்து வரும் செடி, கொடிகளால் பாலம் பலமிழந்து வருகிறது. திருமங்கலத்திலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்லும் ரிங்ரோடு கப்பலூரில் துவங்குகிறது. கீழே செல்லும் ரயில்வே லையனுக்காக ரிங்ரோடு துவங்கும் இடத்தில் மேம்பாலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது ரிங்ரோடு நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டு வருவதால் புதியதாக மற்றொரு மேம்பாலம் கப்பலூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போதுள்ள ரிங்ரோடு மேம்பாலத்தின் பக்கவாட்டில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இவற்றால் பாலம் பலமிழந்து வருகிறது. பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிர்வடைகிறது.

இதே போல் பாலத்தில் போடப்பட்ட தார்கள் பெயர்ந்து பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் வாகனத்தில் செல்வோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக டூவிலரில் செல்வோர் ரிங்ரோடு பாலத்தை ஒருவித பயத்துடனேயே கடந்து செல்கின்றனர். இதேபோல் கப்பலூர் மேம்பாலத்தில் அமைந்துள்ள மின்விளக்குகள் எதுவும் கடந்த பல மாதங்களாக எரியவில்லை. இதனால் பாலம் இருளடைந்து காட்சி தருகிறது. பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்கும் மின்கட்டணம் கட்டாததால் எரியாமல் உள்ளது. இருட்டை பயன்படுத்தி இரவில் பாலத்தில் திருட்டு பயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கப்பலூர் மேம்பாலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. புதிய மேம்பாலம் அமைப்பில் முன்னிரிமை காட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கப்பலூர் பழைய மேம்பாலத்தையும் பராமரிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சாலையும் படு மோசம்; ஹைமாஸ் விளக்கும் எரிவதில்லை

Tags : death ,victim ,Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை