×

திருஞானசம்பந்தர் குருபூஜை விழா

பாபநாசம், மே 29: பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த பசுபதி கோயில் வெள்ளை விநாயகர் கோயிலில் நாயன்மார்களுள் நால்வருள் ஒருவரான திருஞான சம்பந்தரின் குரு பூஜை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு திருஞான சம்பந்தருக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரவு வீதி உலா நடைபெற்றது, இதில் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று பாபநாசம் ஆன்மீக பேரவை சார்பில் பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் ஆலயத்தில் திருஞான சம்பந்தருக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Tags : Thirugnanasambandar Gurupooja ,festival ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!