டூவீலர்கள் மோதல்

2 வாலிபர்கள் பலிகாவேரிப்பட்டிணம், மே 29:  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பனகல்தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்(31). ஷேர் மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மேம்பாலத்தில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரே டூவீலரில், காவேரிப்பட்டணம் தாம்சன் பேட்டையை சேர்ந்த அசாருதீன் (20), ஷாஜகான் (23), சாகிப் இம்ரான் (14) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக டூவீலர்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டது. இதில் ஜெகதீஸ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அசாருதீன், ஷாஜகான், சாகிப்இம்ரான் ஆகியோரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அசாருதீன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED உத்தரப்பிரதேசத்தில் வேன்- லாரி மோதல்; 8 பேர் பலி