×

காரைக்குடியில் பயமுறுத்தும் பல்லாங்குழி சாலைகள்

காரைக்குடி, மே 29: காரைக்குடியில் பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாவட்டத்தின் முக்கிய நகராட்சிகளில் ஒன்று. இங்கு பல்கலைக்கழகம், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் என கல்வி நிறுவனங்களும், வெளி நாட்டு பார்வையாளர்களை கவரும் செட்டி நாட்டு பங்களாக்களும் அதிகம். காரைக்குடி நகராட்சி மொத்தம் 36 வார்டுகளையும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையையும் கொண்ட நகரம்.
இங்குள்ள முக்கிய சாலைகளான செக்காலை ரோடு,  வஊசி சாலை,  செக்காலை வாட்டர் டேங் ஒன்று முதல் மூன்று வீதிகள், சுப்பிரமணியபுரம் முதல் வீதி, நா.புதூர் சாலை என அனைத்து சாலைகளும் வாகன ஓட்டிகளை பல்லாங்குழி ஆட வைத்து பதம் பார்க்கும் சாலைகளாகவே உள்ளன. காரைக்குடி செக்காலை  1ம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பேருந்து நிலையத்துக்கு செல்கின்றன. இந்த சாலையை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதே கிடையாது. சில நேரங்களில் மக்கள் போராட்டம் செய்யபோவதாக அறிவித்தால் கண்துடைப்புக்காக இங்கொன்றும் அங்கொன்றுமாக பேஜ் ஒர்க் மட்டுமே செய்து முடித்துவிடுவதாகவும் மக்களிடம் குற்றச்சாட்டு உள்ளது. தற்போது பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் எப்போது, எந்த சாலையில் பாதாளச்சாக்கடை குழிகள் மூடாமல் திறந்து கிடக்கின்றன என கண்காணித்துக்கொண்டே செல்லவேண்டியுள்ளது.

ஆண்டுக்கு 50000 ஆயிறத்திற்கும் மேல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா தளங்களை கொண்ட காரைக்குடி பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 36 வார்டுகளிலும் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட தெருக்களில் 80 சதவிகித சாலைகள் பயன்படுத்த லாயக்கற்று உள்ளன. மேலும் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததாலும்,  நகர் மன்ற உருப்பினர்களோ நகர் மன்ற தலைவரோ  இல்லாததாலும் மக்களின் குறைகளை யாரிடம் முறையிடுவது என்பது கூட தெரியாமல் திண்டாடுகின்றனர். இதே போன்று காரைக்குடி கழனிவாசல் பேருந்து நிறுத்தத்தில் மிகப்பெரிய பள்ளங்கள் பல மாதங்களாக உள்ளன. இதை நகராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலை துறையும் கண்டு கொள்வதில்லை. கடந்த மாதம் தமிழக ஆளுனர் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த போது அவசர அவசரமாக ரோடு பேஜ் ஒர்க் போடப்பட்டது. அடுத்த இரண்டாவது நாளில் பெய்த மழையில் அந்த சாலையும் காணாமல் போனது என வேதனையுடன் தெரிவித்தனர் ஏரியா வாசிகள்.

Tags : roads ,Pallurangi ,Karaikudi ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க