×

சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் நடை மற்றும் சைக்கிள் பாதைகள்: மாநகராட்சி திட்டம்

சென்னை, மே 29: சென்னை உள்ள முக்கிய சாலைகளில் நடை மற்றும் சைக்கிள் பாதைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகளை பாதசாரிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி சென்னை மாநகராட்சியில் 100 கிமீ நீளமுள்ள சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. இந்த சாலைகளில் மிதிவண்டி பாதை, பேருந்து நிறுத்தம், ஒழுங்குபடுத்தப்பட்ட வாகன நிறுத்தம் மற்றும் சரியான அளவுடன் கூடிய வாகன பாதைகள் அமைக்கப்படவுள்ளன. மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டினை தவிர்த்து பொதுமக்களுக்கு தடையில்லா நடைபாதை போக்குவரத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

நடைபாதைகளுடன் கூடிய தெருக்கள் அமைத்தல், மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்களை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல், நீர்நிலை மற்றும் கால்வாய்களின் கரைகளில் நடைபாதை மற்றும் சைக்கிள் பாதை அமைப்பது இந்த திட்டத்தின் நோக்கம். இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையாளர்கள் கோவிந்தராவ், திவ்யதர்ஷினி, ஆல்பி ஜான் வர்கீஷ், ஸ்ரீதர், தலைமை பொறியாளர்கள் எல்.நந்தகுமார், மகேசன், ராஜேந்திரன், காளிமுத்து, சின்னசாமி, கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சார்ந்த சிறந்த கட்டட வடிவமைப்பு நிறுவனங்கள், நகர்புற திட்டமிடல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : roads ,
× RELATED திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு