×

கும்மிடிப்பூண்டி அருகே பொக்லைன் மோதி மின்வாரிய ஊழியர் பலி

கும்மிடிப்பூண்டி, மே 29 : கும்மிடிப்பூண்டி அருகே பொக்லைன் இயந்திரம் மோதியதில் மின் வாரிய ஊழியர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கிராமத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இதன் விரிவாக்க பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளியாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் வேலை செய்து வந்தார்.


இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பொக்லைன் இயந்திரம் மோதியதில் ஆறுமுகம் படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : power officer ,Gummidipoondi ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் டாக்டர் பலி