×

தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்

பொன்னேரி, ஏப்.24: நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசு பள்ளிகளில் ஒட்டப்பட்ட வாக்குச்சாவடி ஸ்டிக்கர்களை அகற்ற முடியாமல் ஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. இதில் அரசுப் பள்ளி வகுப்பறைகள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இதற்காக தேர்தல் வாக்குப்பதிவிற்கான நுழைவுச் சீட்டு குறித்த தகவல், தேர்தலில் போட்டியிடுவோர் விவரம், வாக்குச்சாவடியின் விவரங்களை ஸ்டிக்கர்களாக தயார் செய்து அதனை வாக்குச்சாவடி நுழைவாயிலில் ஒட்டினர். ஒவ்வொரு தேர்தலிலும் அரசுப் பள்ளிகளில் இதுபோன்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. மேலும் வாக்கு பெட்டிகளை ஏற்றும்போதும் இறக்கும்போதும் அதற்காக பயன்படுத்தப்படும் நாற்காலிகள் சேதமாவதும் உண்டு. மீஞ்சூர் அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை எடுக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். எனவே தேர்தல் பணிகளில் எளிதில் பெயர்த்து எடுக்கக்கூடிய ஸ்டிக்கர்களை பயன்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Dinakaran ,
× RELATED பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட...