×

தண்ணீர் தொட்டியை சுற்றி பாசி படலம்

செம்பட்டி, மே 28: நிலக்கோட்டை தாலுகாவிற்குட்பட்டது சேவுகம்பட்டி பேரூராட்சிக்குட்பட்டது மு.வாடிப்பட்டி. சுமார் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் தண்ணீர் வசதிக்காக பட்டிவீரன்பட்டி செல்லும் சாலையிலும், மு.வாடிப்பட்டி கிழக்கு பகுதியிலும் சிறு மின்விசை தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.  

இந்த தொட்டிகளை பராமரித்து பல மாதங்களாகி விட்டது. இதனால் தொட்டிகளின் வெளியே முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது. இந்த சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு தண்ணீர் பிடிக்க வருபவர்கள் கழிவுநீரில் நின்றபடி பிடித்து செல்லும் அவலம் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தண்ணீரால்தான் எல்லா நோயும் பரவுது. தொட்டி உள்ளே முழுவதும் பாசி படர்ந்து பச்சை பசலேன காட்சியளிக்கிறது. இதனால் என்ன நோய் வருமோ என அச்சத்தில் உள்ளோம். அதேபோல் தண்ணீர் பிடிக்கும் இடத்திலும் சுத்தம் இல்லை. சாக்கடை தேங்கி கிடக்கிறது. எனவே சேவுகம்பட்டி பேரூராட்சி தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்வதுடன் தேங்கி கிடக்கும் சாக்கடையையும் அகற்ற வேண்டும்’ என்றனர்.

Tags : Moss ,
× RELATED நிறை புத்தரிசி பூஜைக்கு சபரிமலை...