×

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

செய்யூர், மே 25:  மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், திமுக தலையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றனர். இதனை தமிழக முழுவதும்  கொண்டாடுகின்றனர். இதையொட்டி, கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சினர் சித்தாமூர் பஜார் பகுதியில் பட்டாசுகள் வெடித்தும்,  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். ஒன்றிய செயலாளர் கதிர்வாணன், பொருளாளர் லிங்கேஸ்வரன், மாநில துணை செயலாளர் அன்புச்செல்வன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் தமிழினி, மாநில துணை செயலாளர் விடுதலை செல்வன், மதுராந்தகம் மாநகர செயலாளர் தமிழரசன், ஹரி, உதயகுமார், வினோத், பாவலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : release ,cheerleaders ,public ,
× RELATED பாரூர் ஏரியில் இருந்து கால்வாய்களை...