×

அரூர் 24 மனை தெலுங்கு செட்டியார்

சங்க புதிய நிர்வாகிகள் தேர்வுஅரூர், மே 25: அரூரில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. மாநில தலைவர் திண்டுக்கல் நடராஜன், துணை தலைவர் கோவை பரமசிவம், சேலம் மாவட்ட தலைவர் ராஜவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

புதிய பொறுப்பாளர்களாக தலைவர் தனபால், செயலாளர் கதிரேசன், பொருளாளர் சண்முகம், துணை தலைவர் சரவணன், இணை செயலாளர் குமரன் மற்றும் புதிய உறுப்பினர்கள் 30 பேர் பதவியேற்று கொண்டனர். விழாவில் முன்னாள் பொறுப்பாளர்கள் வெங்கடேசன், சிவப்பிரகாசம், ரவி, ஆறுமுகம், சுகுமார், மாதவன், வடிவேல், தேர்நல் கண்காணிப்பு குழு மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Rooms ,
× RELATED ஐதராபாத் வெள்ள நிவாரணத்துக்கு தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி