×

நல்லம்பள்ளியில் திமுகவினர் கொண்டாட்டம்

தர்மபுரி, மே 25: தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். புதுவை உள்பட 38 இடங்களில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசை எதிர்த்து, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்றார். இதனை கொண்டாடும் வகையில், நல்லம்பள்ளியில் பஸ் ஸ்டாண்ட் அருகே, கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய நிர்வாகிகள் வீரமணி, பழனிசாமி, சின்னபெருமாள், துரை, நவீன், துரைராஜ், மகேஷ், மணி, துரை, மகேந்திரன், சரண், முத்தமிழ், மோகன், துரை உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். காரிமங்கலம்: தர்மபுரி உள்பட 37 நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், காரிமங்கலம் ஒன்றிய, நகர திமுக சார்பில் ராமசாமி கோயில் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமை வகித்தார். நகர செயலாளர் சீனிவாசன், நகர பொருளாளர் ரகு, முன்னாள் அவைத்தலைவர் மாதையன், காங்கிரஸ் நகர தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஜிட்டாண்டஅள்ளியில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, அனுமந்தபுரம், வெள்ளிச்சந்தை ஆகிய பகுதிகளிலும் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.

Tags : Celebration ,
× RELATED எதிர்கால தமிழ்நாட்டிற்கான...