சிவகங்கை தொகுதியில் 24 வேட்பாளர் டெபாசிட் இழப்பு

சிவகங்கை, மே 25: சிவகங்கை மக்களவை தொகுதியில் அமமுக உள்பட போட்டியிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். இத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திசிதம்பரம், பிஜேபி சார்பில் எச்.ராஜா மற்றும் அமமுக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் 18சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 26பேர் போட்டியிட்டனர். இதில் கார்த்திசிதம்பரம் 5லட்சத்து 66ஆயிரத்து 104வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக எச்.ராஜா 2லட்சத்து 33ஆயிரத்து 237வாக்குகள் பெற்றார். சிவகங்கை மக்களவை தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 15லட்சத்து 50ஆயிரத்து 390பேர் ஆகும். இதில் தபால் ஓட்டுகள் 3ஆயிரத்து 301உட்பட மொத்தம் 10லட்சத்து 84ஆயிரத்து 468வாக்குகள் பதிவானது. வாக்கு சதவீதம் 70ஆகும்.

பதிவான வாக்குகளில் இருந்து நோட்டா பெற்ற வாக்குகளை கழித்துவிட வேண்டும். எஞ்சியுள்ள வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை. வேட்பாளர் பெற்றால் டெபாசிட் கிடைக்கும். இல்லையெனில் பறிபோகும். இத்தேர்தலில் டெபாசிட் பெற 1லட்சத்து 79ஆயிரத்து 197வாக்குகள் பெற்றால் ஒருவர் டெபாசிட் பெறலாம். பிஜேபி வேட்பாளர் எச்.ராஜா 2லட்சத்து 33ஆயிரத்து 237வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்தார். இவர் தவிர அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 24வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை பறி கொடுத்தனர். இத்தொகுதியில் 9ஆயிரத்து 283வாக்குகள் பெற்று நோட்டா ஏழாம் இடம் பிடித்தது.

Tags : Loss ,constituency ,Sivagangai ,
× RELATED பதிவு கட்டணத்தை குறைத்து...