×

நெல்லை மக்களவை தொகுதியில் திமுகவிற்கு வாக்குகளை அள்ளித்தந்த பாளை

நெல்லை, மே 25:  நெல்லை மக்களவை தொகுதியில் பாளையங்கோட்டை தொகுதி திமுகவிற்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளது. ஒவ்ெவாரு முறையும் திமுகவிற்கு அதிக வாக்குகளை வழங்கும் பாளையங்கோட்டை வாக்காளர்கள் இந்த முறையும் அந்த கடமையை நிறைவேற்றியுள்ளனர். நெல்லை மக்களவை தொகுதியில் நெல்ைல, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பாளையங்கோட்ைட தொகுதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் பல தேர்தல்களில் தொடர்ந்து திமுகவே வாகை சூடியுள்ளது. அதேபோல மக்களவை தேர்தலிலும் பாளையங்கோட்டை ெதாகுதியில் மற்ற தொகுதிகளை விட அதிக வாக்குகள் கிடைப்பது வழக்கம். இந்த முறையும் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளர் ஞானதிரவியத்துக்கு 52,204 வாக்குகள் அதிமுக வேட்பாளரை விட கூடுதலாக கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளருக்கு 34710 வாக்குகள் கிைடத்துள்ளன. திமுக வேட்பாளரின் சொந்த தொகுதியான ராதாபுரம் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட 30, 466 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளன.

ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள், வித்தியாசம் வருமாறு: ( தபால் வாக்குகள் மக்களவை தொகுதிக்கு பொதுவானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை)
1)    ஆலங்குளம்
    ஞானதிரவியம் (திமுக)-    91,229
    மனோஜ்பாண்டியன் (அதிமுக)-    71, 125
    வித்தியாசம்-    20104
2)    நெல்லை
    ஞானதிரவியம் (திமுக)-    84,792
    மனோஜ்பாண்டியன் (அதிமுக)-    61,677
    வித்தியாசம்-    23115
3)    அம்பை
    ஞானதிரவியம் (திமுக)-    78335
    மனோஜ்பாண்டியன் (அதிமுக)-    58648
    வித்தியாசம்-    20687
4)    பாளையங்கோட்டை
    ஞானதிரவியம் (திமுக)-    86822
    மனோஜ்பாண்டியன் (அதிமுக)-    34618
    வித்தியாசம்-    52204
5)    நாங்குநேரி
    ஞானதிரவியம் (திமுக)-    86306
    மனோஜ்பாண்டியன் (அதிமுக)-    51596
    வித்தியாசம்-    34710
6)    ராதாபுரம்
    ஞானதிரவியம் (திமுக)-    88735
    மனோஜ்பாண்டியன் (அதிமுக)-    58269
    வித்தியாசம்-    30466


Tags : Nellai Lok Sabha ,constituency ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!