×

இந்நிலையில் மதுப்ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வெற்றி

ஈரோடு, மே 24: ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 5,63,591 வாக்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கணேசமூர்த்தி, அதிமுக வெங்கு மணிமாறன், அமமுக செந்தில்குமார், மக்கள் நீதி மய்யம் சரவணக்குமார், பகுஜன் சமாஜ் கட்சி கோபால், நாம் தமிழர் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சை உள்ளிட்ட 20 வேட்பாளர் போட்டியிட்டனர்.

1678 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு கடந்த மாதம் 18ம் தேதி வாக்கு பதிவு நடந்தது. வாக்கு பதிவின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஈரோடு அடுத்துள்ள சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலையில் இருந்து வந்தார். 2வது இடத்தில் அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனும், 3வது இடத்தில் மக்கள் நீதி மய்யம் சரவணக்குமார் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். இதே போல தபால் வாக்கிலும் திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தொடர்ந்து முன்னிலை வகித்தார். இறுதியாக, திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 5 லட்சத்து 63 ஆயிரத்து 591  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரை விட 2 லட்சத்து 10 ஆயிரத்து 618 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

Tags : Ganesamoorthy ,DMK ,constituency ,Alappuzha Lok Sabha ,
× RELATED கொரோனா தற்போதைய நிலவரம் என்ன?: அனைத்து...