×

மாநில பெண்கள் ஹாக்கி கோபிசெட்டிப்பாளையம் கல்லூரி அணி வெற்றி

திண்டுக்கல், மே 22: திண்டுக்கல் பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட ஹாக்கி கழகம், பெண் ஹாக்கி கிளப் சார்பில் கடந்த மே 18, 19, 20ம் தேதிகளில் மாநில அளவிலான பெண்கள் ஹாக்கி போட்டி நடந்தது. இதில் கோபிசெட்டிப்பாளையம் பிகேஆர் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. 2, 3, 4வது இடங்கள் முறையே சேலம் பத்மவாணி கல்லூரி அணியும், ஈரோடு பி.புளியம்பட்டி கேஒஎம் அரசு பள்ளி அணியும், திருச்சி மணப்பாறை பெண் ஹாக்கி கிளப்பும் பிடித்தன. வெற்றி பெற்ற 4 அணிகளுக்கும் பரிசுத்தொகைகள் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.6 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட எஸ்பி சக்திவேல் வழங்கினார். இதில் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் நாட்டாமை காஜாமைதீன், துணை தலைவர்கள் ரமேஷ் பட்டேல், சுரபி ஜோதி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : State Women's Hockey Gopichettipalayam ,college team ,
× RELATED கல்லூரிகளுக்கிடையேயான...