×

மாவட்டம் மாலையில் படியுங்கள் மதுரை-செங்கோட்டைக்கு இரவு நேரங்களில் ரயில் இயக்க வேண்டும்

திருமங்கலம், மே 21: மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு இரவு நேரங்களில்  ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் இருந்து நெல்லை மாவட்டம், செங்கோட்டைக்கு தினசரி காலை, மதியம், மாலை என மூன்று முறை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், கேரள மாநில மக்களும் பயணிக்கின்றனர். ஆனால், இந்த மார்க்கத்தில், இரவு நேரங்களில் ரயில் போக்குவரத்து கிடையாது. மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு மாலை 5.15 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது. அதன்பின்னர் வேறு ரயில்கள் கிடையாது. இந்த ரயிலில் மதுரையிலேயே பயணிகள் அதிகமாக ஏறுகின்றனர். இதனால், திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சிவகாசி என அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் படிக்கட்டுகளில் நின்று செல்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு இரவு நேரங்களில் ரயில் சேவையை அதிகரிக்க மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்ட மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பயணிகள் கோரிக்கை செங்கோட்டை வரை நீட்டிக்க கோரிக்கை:
மதுரையிலிருந்து கோவைக்கு தினசரி காலை 7.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் இரவு 8 மணிக்கு மதுரை திரும்புகிறது. அதன்பின்னர் மதுரை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துகின்றனர். இந்த ரயிலை செங்கோட்டை வரை நீடித்தால் இரவு நேரத்தில் மதுரை-செங்கோட்டை மார்க்கத்தில் கூடுதல் ரயில் சேவை கிடைக்கும். மதுரையிலிருந்து கோவை செல்லும் இந்த ரயிலை, செங்கோட்டையிலிருந்து புறப்படும்படி அறிவித்தால் நெல்லை, மதுரை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட தென் மற்றும் மேற்கு மாவட்ட பயணிகள் அதிகமாக பயன்பெறுவர். கோவையிலிருந்து குற்றாலம் செல்ல நேரடி பயணிகள் ரயிலாகவும் அமையும்.  எனவே, மதுரை-கோவை பயணிகள் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க, தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Madurai ,Sengottai ,
× RELATED ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 29 கிலோ வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்..!!