×

பிக்கனஅள்ளியில் கட்டி முடித்தும் பயனின்றி கிடக்கும் நீர்தேக்க தொட்டிகாரிமங்கலம்

மே 21:காரிமங்கலம் ஒன்றியம் பிக்கனஅள்ளி ஊராட்சியில், கடந்த 2014-2015ம் ஆண்டு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்குவதற்காக, ₹2 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்து 4 ஆண்டுகளை கடந்த பின்னரும், பயன்பாட்டிற்கு வராமல், காட்சி பொருளாகவே காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீருக்காக காலி குடங்களுடன் அலைந்து வருகின்றனர். எனவே, மேல்நிலை நீர்தேக்கதொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : building ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...