×

பி.கே.பி. சாமி பள்ளி 25ம் ஆண்டு வெள்ளிவிழா

மொடக்குறிச்சி, மே 19: மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பள்ளி கிராமம் கல்யாணிபுரத்தில் 1993ம் ஆண்டு பி.கே. பழனிச்சாமிக்கவுண்டர், ருக்மணி அம்மாள் சாமி நர்சரி பள்ளியை துவங்கினர். தற்போது இப்பள்ளி மேல்நிலை பள்ளியாக உயர்ந்துள்ளது. மேலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.இந்நிலையில் பி.கே.பிசாமி பள்ளி 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.

மேலும் இரண்டரை வயது முதல் 3 வயதுகளுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலர் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பில் மாணவ, மாணவியர் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர். மாணவர்களுக்கு கராத்தே, யோகா, சதுரங்கம், அபாகஸ், பேண்டுவாத்தியம், சாரண, சாரணீய இயக்கம், நடனம், பாட்டு, செஸ், கீபோர்டு, ஸ்கேட்டிங், பசுமைப்படை, தமிழ், ஆங்கில இலக்கியப் பேரவை, ஜே ஆர் சி,  ஆர் எஸ் பி, நுகர்வோர் மன்றம், வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை பயிற்சி, ஐஐடி, நீட் கோச்சிங் போன்ற சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

Tags : Pikepi Sami ,school ,celebration ,
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்