×

குறுகிய பாதாள சாக்கடை குழாய்களால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

ஈரோடு, மே 17: குறைந்த கொள்ளளவு கொண்ட பாதாள சாக்கடை குழாய்களால் மழைக்காலத்தில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 9 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மாநகராட்சியின் மொத்த பரப்பளவான 110 சதுர கிலோ மீட்டர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வீடுகளில் இருந்து பாதாள சாக்கடை திட்டக்குழாய்களுக்கு கழிவறை, குளியல் அறை, மற்றும் அறை என வீட்டின் மொத்த கழிவு நீரும் செல்லும் வகையில் வீட்டில் இருந்து குழாய் அமைத்து பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

ஆனால், மழைக்காலங்களில் மொட்டை மாடிகளில் இருந்து வரும் மழைநீர் பெருக்கெடுத்து வரும்போது பாதாள சாக்கடையின் பிரதான குழாய் கொள்ளளவு தாங்க முடியாமல் பெரும்பாலான வீடுகளில் கழிவுநீர் வெளியேறாமல் வீடுகளில் தேங்கும் நிலை உள்ளது. ஒரு சில பகுதிகளில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை இணைப்பு குழிகளில் போடப்பட்டுள்ள சிமெண்ட் மூடிகளை தாண்டி கழிவுநீர் சாலைகளில் ஓடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்,`வழக்கமான நாட்களில் கழிவுநீர் செல்வதில் எந்த பிரச்னையும் இருப்பதில்லை. மழைக்காலத்தில் வீட்டின் மொட்டை மாடிகளில் இருந்து வரும் மழை நீரானது பாதாள சாக்கடை மெயின் குழாயில் செல்ல முடியாமல் தேக்கமடைவதோடு சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜங்சன் தொட்டியில் இருந்து வெளியேற தொடங்கி விடுகின்றன.

இதனால், சாலை முழுவதும் சாக்கடை கழிவுகளால் நிரம்பி விடும் நிலையை காண முடிகிறது. பாதாள சாக்கடை குழாய்கள் பெரிய அளவில் மழைக்காலத்தில் வரும் தண்ணீரையும் சமாளிக்கும் வகையில் அதிக கொள்ளளவு கொண்ட குழாய்களை அமைத்திருக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இதை கவனத்தில் கொள்ளாததால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி