×

தர்மசாஸ்தா கோயில் கொடை விழா

நாகர்கோவில், மே 17: பூ சாஸ்தான்விளை ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் 7 நாட்கள்  கொடை விழா கடந்த 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து நிர்மால்ய பூஜை, மகா கணபதி ஹோமம், கலச பூஜை, சுவாமிக்கு கலச அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அபிஷேகம், அன்னதானம், மாலையில் திருவிளக்கு வழிபாடு, தீபாராதனை, திருவிளக்கு பூஜை ஒழுங்கு பரிசு வழங்குதல், சிறப்பு பட்டிமன்றம் ஆகியன நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மங்களவாத்தியம், நிர்மால்ய பூஜை, அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் ஆகியன நடைபெற்று வருகிறது.  2வது நாள் காலையில் கோலப்போட்டி, விளையாட்டு போட்டி, மதியம் பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, மாறுவேடப் போட்டி, மாலையில் ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. 3ம் திருநாளன்று மெல்லிசை, 4ம் திருநாளன்று புஷ்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் ஆகியன நடைபெற்றது.

5ம் திருநாளான இன்று(17ம்தேதி) காலை 7 மணிக்கு தீபாராதனை, 11.30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4மணிக்கு யானை மீது சந்தனகுடம் பவனி வருதல் ஆகியன நடைபெறுகின்றன. 6ம் திருநாளான நாளை வழக்கமான திருவிழா பூஜைகளுடன்,  இரவு 7 மணிக்கு நையாண்டி மேளம், தொடர்ந்து பரிசு வழங்குதல்,  வில்லிசை, இரவு 10 மணிக்கு அலங்கார மஹா தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. 7ம் திருநாளன்று  காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், தொடர்ந்து வில்லிசை, பொங்கல் வழிபாடு, மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை ,மதியம் 1 மணிக்கு அன்னதானம் ஆகிவை நடைபெறுகிறது. 26ம் தேதி 8ம் கொடை விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். உடல் திறன், மனவலிமை இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம்

Tags : Dharmasastha Temple Donor Festival ,
× RELATED கடுமையான வெப்பத்தை அனுபவிக்கிறோம்...