×

நீடாமங்கலத்தில் இருந்து நெல்லைக்கு 1200 டன் அரிசி மூட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம், மே 15:   திருவாரூர் மாவட்டம் நீடாமங்லம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டு  நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன்களில் பொது விநியோகத்திட்டத்திற்கு அரிசியும், அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று  மன்னார்குடி பகுதிகளில் உள்ள  மத்திய சேமிப்பு கிடங்கு பாமணி, வட்ட கிடங்குகள் மன்னார்குடி,நீடாமங்கலம் ஆதனூர் உள்ளிட்ட  பகுதியிலிருந்து    நேற்று 96 லாரிகளில் 1200 டன் சன்ன ரக அரிசி மூட்டைகள்  நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 20 வேகன்(ரயில் பெட்டிகளில்) திருநெல்வேலி மண்டலத்திற்கு  பொது வினியோக திட்டத்திற்கு  தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags : Neemamangalam ,Nellai ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்