×

ஆண்டிபாளையம் புது ஏரி ஆக்கிரமிப்பு

முஷ்ணம், மே 14: முஷ்ணம் அருகே மாமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபாளையத்தில் புது ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியாகும். இதன் மூலம் மழை காலங்களில் வரும் நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் கால்நடைகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது கோடைக்காலங்களில் பயன் உள்ளதாக இருந்து வருகிறது. இந்த ஏரி ஆக்கிரமிப்பால் ஏரியின் பரப்பளவு குறைந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் சிதம்பரம் சார்-ஆட்சியருக்கு புகார் அளித்ததின்பேரில் சார்-ஆட்சியர் விஷ்னுமகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியினர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றியும், அப்பகுதியில் உள்ள குருவங்குளத்தில் அனுமதியின்றி சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு மண் அடித்து வருவதாகவும் தெரிவித்தனர். ஆய்வின்போது மாமங்களல கிராம நிர்வாக அலுவலர் சித்ரா, அகரபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முருகப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு