×

சில்வார்பட்டி அரசு பள்ளியில் எல்கேஜி சேர்க்கை மும்முரம்

தேவதானப்பட்டி, மே 14: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் மாணவர்கள் பல போட்டிகளில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் முதலிடம் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தின் மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான வேலைப்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தற்போது நடைபெற்றுவருகிறது. மாதிரிபள்ளி தேர்வான பிறகு எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் அதிகப்படியாக எல்கேஜி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் பெற்று வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெற்றோர்கள் தினந்தோறும் எல்கேஜி விண்ணப்பங்களை பெற்றுவருகின்றனர்.

Tags : Elghee ,Government School ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா