×

மிரட்டுறாங்கய்யா... சுயேட்சை கதறல்

திருப்பரங்குன்றம் தொகுதி சுயேட்சை வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் மது குடிப்போர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்லப்பாண்டியன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். திமுக தலைவர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து செல்லப்பாண்டியன் அறிக்கை வெளியிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் செல்லப்பாண்டியனை போனில் மிரட்டல் விடுப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Tags :
× RELATED பயிர்களின் பூஸ்டர்கள் பயன்பாடு: வேளாண் மாணவிகள் விளக்கம்